TNTJ நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போட்ட இராமநாதபுர மாவட்ட காவல் துறையை கண்டித்து இராமநாதபுர மாவட்ட TNTJ சார்பாக கடந்த செவ்வாய் கிழமை 18.01.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது இதில் மாநில தலைவர் பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள் அப்பொழுது அவர் கூறுகையில் " S.P.பட்டினம் பள்ளிவாசல் பிரச்சணையில் தமிழக அரசை கண்டித்து TNTJ நடத்திய முதல்வர் வீடு முற்றுகை போராட்டத்தினை பொறுத்து கொள்ளமுடியாமல் அதனை பழிவாங்கும் எண்ணத்தில் தான் இந்த பொய் வழக்கு போடபட்டுள்ளது" என்று தெரிவித்தார்
மேலும் "பொய் வழக்கை திரும்ப பெறாவிட்டாலோ அல்லது இது போன்ற தொடர் முஸ்லிம் விரோத போக்கை தி மு க அரசு இனிமேலும் செய்தாளோ வரும் ஜனவரி-30 ல் நடைபெற உள்ள TNTJ பொதுக் குழுவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி மு க அரசுக்கு எதிரான நிலை பாட்டை அறிவிப்போம்" என்றும் எச்சரித்தார்.
இதில் நமது ஊரின் சார்பாக பலர் கலந்து கொண்டனர் மாவட்ட தலைவர். சைப்புல்லா கான் மற்றும் பல நீர் வாகிகள் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்தனர் இந்த செய்தி தினகரன், தமிழன் உள்ளிட்டா பல ஊடகங்களில் வெளியானது.
N.M.சயிது ஹாஜியார் சந்திப்பு
ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு வரும் வழியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் ந.மு.சயீது ஹாஜியாரை (TNTJ நிறுவனர் S.P.பட்டினம் கிளை) சந்தித்து உடல் நலம் விசாரித்து சென்றார். மாவட்ட தலைவர் சைப்புல்லாகான், தொண்டி நகர் கிளை தலைவர் கலிபுல்லாஹ் மற்றும் சில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வடக்கம்மாபட்டினத்தில் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம்
நமது ஊரின் அருகில் உள்ள வடக்கம்மாபட்டினத்தில் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம் நடை பெற்றது இந்த நிகழ்ச்சியில் நமது ஊரில் இருந்து TNTJ நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குறிப்பு: இங்கு நடை பெற்ற நிகழ்ச்சியில் ஆண்களை விட பெண்களே பெரும்பான்மையாக கலந்து கொண்டனர் இது போன்ற நிலையை அல்லாஹ் நமது ஊருக்கும் அளிப்பானாக